tamilnadu

img

பேராவூரணி அருகே பாய்மர படகுப் போட்டி

தஞ்சாவூர், ஜூன் 3-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கழுமங்குடா மீனவக்கிராமத்தில் பாய்மர படகுப் போட்டிநடைபெற்றது. வைகாசி விழாவைமுன்னிட்டு கழுமங்குடா கிராமத்தார் கள், இளைஞர் நற்பணி மன்றம் சார்பில்நடைபெற்ற போட்டியில் 20 அணிகள்பங்கேற்றன. சுமார் 5 கிமீ தூரம் வரையிலான போட்டியில் தொண்டி புதுக்குடி கருப்பையா படகு முதலிடத்தையும், அதே பகுதியை சேர்ந்த வேலம்மாள் படகு இரண்டாம் இடத்தையும், பிரியதர்ஷினி படகு மூன்றாம் இடத் தையும், கே.கே.பட்டினம் அனு படகு நான்காம் இடத்தையும் பிடித்தது.  முதலாவதாக வந்த படகுக்கு  ரூ.25ஆயிரம் ரொக்கப்பரிசை கழுமங்குடாஇளைஞர்கள் மற்றும் பஞ்சாயத்தார் களும், சுழற்கோப்பையை பட்டுக்கோட்டை வி.அரவிந்தும், இரண்டாவதாக வந்த படகுக்கு ரூ20 ஆயிரத்தை திமுக மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் வி.ஜெயப்பிரகாஷ், பேராவூரணி சி. ராகேஷ் நண்பர்களும்,சுழற்கோப்பையை சேதுபாவாசத்திரம் பி.ஆர்.அய்யாத்துரை, ஆர்.மாரிமுத்துவும், மூன்றாவதாக வந்த படகுக்கு ரூ15 ஆயிரத்தை தென்னங்குடி ஆர்.ராஜாவும், சுழற்கோப்பையை கழுமங்குடா எஸ்.பாலுவும், நான்காவதாகவந்த படகுக்கு ரூ10 ஆயிரத்தை சேதுபாவாசத்திரம் எஸ்.வைரவன், கழுமங்குடா பி.தினேஷ், சுழற்கோப்பையை கழுமங்குடா கே.பாலமுருகன் ஆகியோரும் வழங்கினர். முன்னதாக நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் ஏ.ஜெயபால் போட்டியை தொடங்கி வைத்தார்.