கார்ப்பரேட்டை விரட்டும்
இன்றைய நவீன உலகில் விளம்பரம் இல்லாத எந்த விளையாட்டு தொடரும் இல்லை. விளையாட்டு உலகில் பல்வேறு துறைகள் அதிக லாபம் பெற்றா லும் நன்றாகக் கல்லா கட்டுவது விளம்பரத் துறை மட்டுமே. விளையாட்டு மைதான தளவாட அமைப்பு கள், வீரர்களின் ஜெர்ஸி, விளையாட்டு உபகரணங்கள், வீரர்களுக்கு வழங்கப்படும் பரிசு என அனைத்திலும் விளம்பரம் தான் முன்னணியாக உள்ளது. விளம்பரம் இல்லாத விளையாட்டு உண்டா? என்ற கேள்வியை யாரேனும் தங்களிடம் கேட்டால் சட்டென்று இல்லை என்று தான் கூறுவீர்கள். ஆனால் விளம்பரம் இல்லாத மிகப்பெரிய விளையாட்டு தொடர் ஒன்று டென் னிஸ் உலகில் உள்ளது. அதுவும் கிராண்ட்ஸ்லாம் தொடர். ஆச்சரியமாக இருக்கிறதா? இங்கிலாந்து அர சால் நடத்தப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இந்த நிகழ்வு காலம் காலமாக நடைபெற்று வருகிறது. தனது துணிச்சலான செயலின் மூலம் விம்பிள்டன் நிர்வாகம் விளம்பரத்தைத் தனிமைப்படுத்தி வருகிறது. இந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் விளம்பரம் மட்டுமல்லாது அனைத்து பிரிவுகளிலும் கடும் கட்டுப் பாடுகள் உள்ளன. அதைப்பற்றிப் பார்ப்போம்: விளம்பரம் : கார்ப்பரேட் முதல் அரசு விளம்பர நிறு வனங்கள் அனைத்தும் இங்கு விளம்பரம் செய்யக் கூடாது என்பது விதி. இந்த தொடரை நடத்தும் விம்பிள்டன் அமைப்பும் சிறிய அளவில் லோகோவை பயன்படுத்த வேண்டும்.
உடை கட்டுப்பாடு: டென்னிஸ் விளையாட்டில் அணி யும் உடை தொடர்பான விஷயங்களில் அடிக்கடி சர்ச்சை ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம் வட தென் அமெரிக்க மற்றும் ஐரோப்பா கண்டத்திலிருந்து டென்னிஸ் விளையாட வரும் வீராங்க னைகள் தங்களது டென்னிஸ் ஜெர்ஸியை மிகவும் கவர்ச்சியாக அணிந்து விளையாடுவதில் தான். இதனைக் கட்டுப்படுத்த உலக டென்னிஸ் சங்கம் பல்வேறு வகையில் முயற்சி செய்தும் பலனில்லை. ஆனால் விம்பிள்டன் நிர்வாகம் வீரர் - வீராங்கனைகள் அனைவரும் ஒரு வகையான வெள்ளை நிறத்திலான உடையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கவர்ச்சிக்கு ஆசைப்பட்டால் தொடரை விட்டு வெளி யேறுங்கள் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது. நடப் பாண்டில் கூட இதே நடைமுறையில் தான் வீரர் - வீராங்க னைகள் விளையாடினார்கள். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்றால் உள்ளாடை முதல் காலில் அணி யும் ஷூ வரை வெள்ளை நிறத்தில் தான் இருக்க வேண்டும்.
டென்னிஸ் கோர்ட் (பிட்ச்) : தற்போதைய நவீனக் காலத்தில் டென்னிஸ் பிட்சுகள் அனைத்தும் ரப்பர் போன்ற ஒருவகை கடினமான பொருட்களால் அமைக்கப்படுகிறது. ஆனால் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நவீனத்தை விட்டுவிட்டு புல்தரைகளை மட்டுமே பயன்படுத்துகிறது. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் களிமண் தரையில் பாரம்பரியத்தை கடைப்பிடிக்கிறது. ரசிகர்களுக்கும் கட்டுப்பாடு: டென்னிஸ் உலகில் வீரர்கள் கூடச் சொல்லும் விதிகளைக் கவனமாகக் கேட் பார்கள். ஆனால் ரசிகர்கள் கேட்கவே மாட்டார்கள். ஏனென்றால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. சட்டம் ஏதும் கிடையாது என்பதால் ரசிகர்கள் இஷ் டத்திற்கு நடனம் ஆடுவார்கள். ஆனால் விம்பிள்டன் நிர்வாகம் இதனைச் சாமர்த்தியமாகச் செயல்படுத்தி வரு கிறது. விளையாட்டை ரசிக்க வாருங்கள். பொழுது போக்குக்காக வராதீர்கள் எனக் கண்டிப்புடன் கூறு வதால் அமைதியாக ரசிக்கும் டென்னிஸ் விரும்பிகள் மட்டுமே இந்த தொடரில் அதிகம் இருப்பார்கள். மற்ற டென்னிஸ் தொடர்களில் நிலவும் கூச்சல் குழப்பத்திற்கு இங்கு வேலையில்லை.
1887-ஆம் ஆண்டு முதல் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. அன்றைய கால கட்டத்தில் பயன்படுத்திய நவீன முறைகளை இன்று பாரம்பரியம் என்ற முறையில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது என்பது தான் ஆச்சரியமான விஷயம். ஒவ் வொரு ஆண்டும் ஜூலை முதல் வாரத்தில் நடத்தப்படும் இந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடர் டென்னிஸ் உலகில் அதிக பரிசுத்தொகை கொண்ட கிராண்ட்ஸ்லாம் என்ற பெருமையை தன் கைவசம் வைத்துள்ளது. தற்போதைய நூற்றாண்டில் கழுத்தில் அணியும் தங் கம் முதல் சமையலில் தாளிக்கும் கடுகு வரை என அனைத்திலும் கார்ப்பரேட் வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் வளருவதற்கு விளம்பரம் தான் முக்கிய அச்சாணி. அதனை விம்பிள்டன் பாரம்பரியம் என்ற பெயரில் கழற்றியது போல உலக நாடுகளும் ஒன்று பட்டு கழற்றினால் கார்ப்பரேட் என்னும் வண்டி முன் னேற்றம் நோக்கி நகரமுடியாது. உலகில் ஏழைகளும் இருக்க மாட்டர்கள். பாரம்பரியம் என்ற பெயரில் விளம் பரத்தை விரட்டி அடிக்கும் துணிச்சலான விம்பிள்டன் நிர்வாகம் தான் உலகின் சிறந்த நிர்வாகம் எனக் கூற லாம்.
சர்ச்சை
2019-ஆம் ஆண்டு சீசனில் பிரபல சொகுசு கார் நிறுவனமான ஆடி நிறுவனத்தின் (ஜெர்மனி) விளம்பர பதாகை விம்பிள்டன் தொடரிலிருந்தது. ரசிகர் கொண்டு வந்ததா? இல்லை நிர்வாகம் அதற்கு அனுமதி அளித்ததா? என்பது மட்டும் இன்று வரை புரியாத புதிராக உள்ளது.
- சதீஸ் முருகேசன்