அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில் இருந்து காயம் காரணமாக தற்போதைய சாம்பியன் நோவக் ஜோகோவிச் வெளியேறினார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் காலிறுதிக்கு முந்தையை சுற்றுக்கான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் தற்போதைய சாம்பியனும் செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் சுவிட்சர்லாந்தை சேர்ந்த வாவ்ரிங்காவை எதிர்கொண்டார்.
மூன்றாவது செட் தொடக்கத்தில் ஜோகோவிச்சுக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஆட்டத்தில் இருந்தும் வெளியேறினார். இதை தொடர்ந்து 6-4, 7-5, 2-1 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்றிருந்த வாவ்ரிங்கா, காலிறுதி போட்டிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டார்.