தென்காசி, ஜுலை 7- வீரகேரளபுரம் காவல்துறையின் மிருகத்தனமான தாக்குதலின் விளைவால் குமரேசன் என்கிற இளைஞர் மரணமடைந்தது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாரள் கே.ஜி.பாஸ்கரன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 8.5.2020 அன்று ஒரு இடப்பிரச்சனை சம்மந்தமாக செந்தில் என்பவர் குமரேசன் மற்றும் அவரது தந்தை நவநீதகிருஷ்ணன் மீது புகார் கொடுத்துள்ளார். அதன்மீதான விசாரணை க்காக வரசொன்னதன் பேரில் இருவரும் வீரகேரளம் புதூர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். விசார ணையின்போது காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் குமரேசனை கெட்டவார்த்தைகளில் திட்டி கன்னத்தில் ஓங்கி மாறிமாறி அடித்துள்ளார். அதற்கு குமரேசன் நான் எந்த தப்பும் செய்யாதபோது எதற்காக என்னை அடிக்கி றீங்க என்று கேட்டுள்ளார். அதற்கு எஸ்.ஐ சந்திரசேகர் “என்னையே எதிர்த்து பேசுறயால, உன்னை தொலைச்சி கட்டுறேன் பார்” என்று சொல்லி கெட்டவார்த்தையால் திட்டினார்.
இன்று ஆர்ப்பாட்டம் |
காவல்துறையின் மனித தன்மையற்ற இந்த கொடூர செயலை கண்டித்து தென்காசி மாவட்டம் முழுவதும் ஜூலை 8 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து பகுதி மக்களும் திரளாக பங்கேற்குமாறு கே.ஜி.பாஸ்கரன் கேட்டுக்கொண்டுள்ளார். |
பின்னர் விசாரணை முடிந்து இருவரும் வீட்டிற்கு சென்றுவிட்டனர். மறுநாள் 9.5.2020 அன்று மாலை சுமார் 3 மணி அளவில் குமரேசன் வீரகேரளம்புதூர் பஸ்நிலைய ஆட்டோ ஸ்டேன்டில் நின்றுகொண்டு இருக்கும் போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், மீண்டும் உன்னை விசாரிக்க வேண்டும் என்று காவல் நிலையம் வரச் சொல்லியுள்ளார். அதன்படி மறுநாள் (10.5.2020) குமரேசன் தனியாகவே காவல்நிலையம் சென்றுள்ளார். அப்போது அவரை தனி அறைக்குள் அழைத்து சென்ற காவல் உதவி ஆய்வாளர் சந்திர சேகர் மற்றும் காவலர் குமார் என்பவரும் மிக கொடூரமாக தாக்கியுள்ளனர். எஸ்.ஐ. சந்திரசேகர் லத்தியாலும் காவலர் குமார் கையாலும் மாறிமாறி அடித்துள்ளனர். சம்மணம் போட்டு உட்கார சொல்லி இரண்டு தொடைக ளிலும் இருவரும் ஏறி நின்றுள்ளனர். வலியால் குமரேசன் கதறி அழுதும் விடவில்லை. எஸ்.ஐ சந்திரசேகர் தனது பூட்ஸ் காலால் உயிர்தடத்தி லும் வயிறு நெஞ்சுப் பகுதியிலும் ஓங்கி ஓங்கி உதைத்துள் ளார். காவலர் குமார் குனியவைத்து முதுகில் முழங்கை யால் ஓங்கி ஓங்கி குத்தியுள்ளார். எஸ்.ஐ சந்திரசேகர் லத்தியால் முதுகில் ஓங்கி ஓங்கி அடித்திருக்கிறார். பின்னர் நாங்கள் அடித்ததை வெளியே சொன்னால் உன் மீது கேஸ் போட்டு உள்ளே போட்டுவிடுவோம் என்றும் உன் அப்பனுக்கும் இதே மாதிரி அடிவிழும் என்றும் மிரட்டி அனுப்பியுள்ளனர்.
இந்த கொடூரமான மனிதத்தன்மை யற்ற செயலை குமரேசன் யாரிடமும் சொன்னால் தனது அப்பாவையும் காவல்துறையினர் அப்படி அடித்து விடுவார்கள் என்கிற அச்சத்தில் யாரிடமும் சொல்லாமல் இருந்துவிட்டார். சிகிச்சை எடுத்துக்கொண்டால் உறவி னர்களுக்கு தெரிந்துவிடும் என்பதால் மருத்துவ மனைக்கும் போகவில்லை. இதனால் சுமார் ஒரு மாதம் கழித்து அடிபட்ட உள்காயங்கள் உடலில் பாதிப்பை உருவாக்கி இரத்த வாந்தி எடுத்த பின்னரே மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். காவல்துறையினர் தாக்கியதில்தான் தனக்கு இந்தநிலைமை என்று குமரேசன் டாக்டரிடம் சொன்ன போதுதான் அவரது அப்பாவுக்கும் இந்த விசயம் தெரிந்தது. பின்னர் 14.6.2020 அன்று வீரகேரளம்புதூர் காவல் நிலையத்திலிருந்து வந்த காவல்துறையினர் குமரேசனிடம் விசாரித்துவிட்டு புகார் வாக்குமூலம் எதுவும் பெறாமலே சென்றுவிட்டனர். மனிதத் தன்மை யற்ற முறையில் நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வா ளர் சந்திரசேகர் மற்றும் காவலர் குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 19.6.2020 அன்று மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கும் குமரேசனின் அப்பா தபாலில் புகார் மனுவை அனுப்பியுள்ளார்.
காவல்துறை தரப்பில் இருந்து மனுவை திரும்பபெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தினார்கள். ஆனால் அவரது அப்பா மறுத்துவிட்டார். இந்த நிலையில் குமரேசன் கடந்த 27.6.2020 அன்று சிகிச்சை பலனின்றி மருத்துவனையில் இரவு 8.00மணி யளவில் இறந்துவிட்டார். இதனை கேள்விபட்ட வீரகேர ளம்புதூர் பொதுமக்கள் இறப்பிற்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அன்று இரவே சாலை மறியல் போராட்டம் செய்தனர். அதன்பிறகு காவல்துறை கண்காணிப்பாளர் தலைமை யில் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வழக்கு பதிவதாக ஒத்துக்கொண்டனர். அதன்படி குற்ற விசாரணை முறைச்சட்டம் பிரிவு 174(3)ன் கீழ் வழக்கு பதியப்பட்டது. மறுநாள் உடற்கூராய்வுக்கு பின்னர் குமரே சனின் உடல் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் குற்றம் செய்த காவல்துறையினர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரிய வில்லை. எனவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். குமரேசனின் மர ணத்திற்கு காரணமான காவல் உதவி ஆய்வாளர் சந்திர சேகர் மற்றும் காவலர் குமார் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சட்டப்பூரவமாக உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.