tamilnadu

img

‘நிஜாமாபாத்’ சரியில்லை.. இந்தூர் என மாற்றுங்கள்! பாஜக எம்.பி. சொல்கிறார்

நிஜாமாபாத்:
தெலுங்கானா மாநிலத்திலுள்ள, நிஜாமாபாத்தை, ‘இந்தூரு’ எனப் பெயர்மாற்றம் செய்ய வேண்டும் என்று அந்ததொகுதியின் பாஜக எம்.பி.யான தர்மபுரி அரவிந்த் கூறியுள்ளார்.இஸ்லாமிய அடையாளத்தில் இருக்கும் நகரங்களின் பெயர்களை, இந்து அடையாளத்திற்கு மாற்றும் நடவடிக்கையை பாஜக ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே, தர்மபுரி அரவிந்த்தும் ‘இந்தூரு’ கோரிக்கையை முன்வைத்துள்ளார்.“நமது ஊருக்கு முதலில் ‘இந்தூரு’ என்று தான் பெயர் இருந்தது. இந்து என்றால், இந்தியா அல்லது இந்துஸ்தான் எனப் பொருள். அந்தப் பெயர் இருக்கும் வரையில் நமது ஊர் செழிப்புடன் இருந்தது. ஆனால், நிஜாமின் பெயரால் நிஜமாபாத் என எப்போது மாற்றப்பட்டதோ, அப்போதிருந்தே நிஜாமாபாத் வறண்ட பூமியாகி விட்டது. நிஜாமாபாத் சர்க்கரை ஆலை கூட மூடப்பட்டு விட்டது. விவசாயிகளுக்கும் நன்மை கிடைக்கவில்லை. இந்த நிலை மாற வேண்டும் என்றால், ஊருக்கு நல்லஎதிர்காலம் வேண்டுமென்றால், நிஜாமாபாத் எனும் பெயரைநீக்கிவிட்டு, பழைய பெயரான ‘இந்தூரு’ என்ற பெயரையே சூட்ட வேண்டும்” என்று தர்மபுரி அரவிந்த் கூறியுள்ளார்.