சென்னை,மே 21-பொறியியல் கல்லூரி மாணவர்கள் கணிதப்பாடத்தில் தேர்ச்சியடைய தடுமாறுவதாகவும் தமிழகத்தில் பொறியியல் பயிலும் மாணவர்களில் வெறும் 25 சதவீதம் பேர் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சியடைவதாகவும் ஆய்வு ஒன்று தெரி விக்கிறது.இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாஆய்வு மேற்கொண்டது.இந்த ஆய்வின் விவரங்களின்படி, தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் 481 பொறியியல் கல்லூரி களில் முதலாமாண்டு பொறியியல் மாணவர்கள் சுமார் 81,178 பேர் தேர்வு எழுதினர். அதில் 20,562 பேர் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 25.33 சதவீதம் மட்டுமே. கடந்த ஆண்டில் 40 சதவீதம் பேர் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர். பொறியியல் கணிதம் ஒரு பாடத்தில்வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததால்தான் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக கல்லூரிகளின் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து கணித பேராசிரியர் ஒருவர் கூறுகையில், பன்னிரெண்டாம் வகுப்பை படித்து முடித்து வரும் மாணவர்கள் அடிப்படைக் கணிதத்தில் மிகவும் வலிமையானவர்களாக இருப்பதில்லை. பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு டிபரென்ஷி யல் கால்குலஸ் முக்கியப்பாடமாக உள்ளது. இதைப் பெரும்பாலான மாண வர்கள் சிறப்பாகப் படிப்பதில்லை. இப்பாடம் பிளஸ்-1 வகுப்பில் தான் உள்ளது. மாணவர்களின் திறனைமேம்படுத்த இணைப்பு வகுப்புகள் நடத்தினாலும் போதிய பலன் கிடைப்ப தில்லை என்று தெரிவித்தார். இயற்பியல் பாடத்தில் 55.46 சதவீதம் பேரும் வேதியியல் பாடத்தில்68.55 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். 12 ஆம் வகுப்பு கணிதப் பாடத்தில்90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் கூட பொறியியல் கணிதப் பாடத்தில் தடுமாறுவதாகப் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.