சென்னை,நவ.25- சட்டப்பேரவை நடவடிக்கைகள் அனைத்தையும் மின்னனு முறையில் மாற்று வது குறித்த பயிற்சி வகுப்பை பேரவையில் பேரவைத் தலைவர் ப.தனபால் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் உள்ள மாநில சட்டப்பேர வைகளின் நடவடிக்கைகளை காகிதம் இல்லாத வகையில் மாற்றம் செய்ய தேசிய ‘இ-விதான்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத் தியுள்ளது. பாரம்பரியமிக்க தமிழக சட்டப்பேரவையில் இதற்கான 2 நாள் பயிற்சி வகுப்பை பேரவைத் தலைவர் தனபால் தொடங்கிவைத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் கோப்பு களில் தொடங்கி சட்டப் பேரவை உறுப்பி னர்களுக்கு அளிக்கப்படும் ஆவணங்கள் வரை அனைத்தும் டிஜிட்டல் வடிவத்துக்கு மாறும். பேரவை மண்டபமும் டிஜிட்டல் மய மாக்கப்பட்டு மிகப்பெரிய டிஜிட்டல் திரை கள், ஒவ்வொரு உறுப்பினரின் இருக் கைக்கு முன்பாக தொடு திரைகள், கைய டக்கக் கணினி உள்ளிட்டவை வழங்கப்பட வுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இ-விதான் நாடு முழுவது மாக நடைமுறைப்படுத்தப்பட் டதும் நாடாளு மன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய தகவல்கள் டிஜிட்டல் வடிவிலேயே அளிக்கப்படும் மேலும் இ-விதான் இணையதளத்தில் நாடாளுமன்றம், தில்லி மேல்- சபை உள்பட நாட்டின் அனைத்து சட்டமன்றங்களும் இணைக்கப்படும். சட்டமன்ற உறுப்பி னர்கள் இதில் தனித்தனியாக log in- செய்து கொள்ளலாம். அந்த log in-ல் அவர்களுக்கு சட்டசபை செயலகம் மூலம் தகவல்கள், நோட் டீஸ்கள், சட்டசபை நிகழ்ச்சிகள் குறித்த தக வல்கள் அளிக்கப்படும். அவர்களும் அந்த தளத்தின் வழியாகவே பதிலளிக்க வேண்டும்.