2020 நிமிடங்களில் 2020 கவிதைகள் எழுதி தமிழக இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜலகாம்பாறை அருகே இருக்கும் ஜடைகிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவர் பள்ளி நாட்களில் இருந்தே கவிதை புத்தகங்களை படித்து வந்தார். எந்த தலைப்பை சொன்னாலும் உடனடியாக கவிதை எழுதிவிடுகிறார். இந்நிலையில், 2020-ஆம் ஆண்டில் 2020 நிமிடங்களில் 2020 கவிதைகள் எழுதி சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை கின்னஸ் அமைப்பு அங்கீகரித்துள்ளது. இவருடைய கவிதைகள் விரைவில் புத்தகமாக வெளியாக விருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.