tamilnadu

img

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் பணியிடமாற்றத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானியின் பணியிடமாற்றத்துக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானியை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்து உச்சநீதிமன்ற கொலீஜியம் சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தது. கொலீஜியத்தின் பரிந்துரையை தன்னால் ஏற்க முடியாது எனக் கூறி தஹில் ரமானி குடியரசுத் தலைவருக்கு ராஜினாமா கடிதம் எழுதியிருந்தார். தஹில் ரமானியின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் தஹில் ரமானியை இடமாற்றம் செய்தததை எதிர்த்து வழக்கறிஞர் கற்பகம் தொடர்ந்த வழக்கில், ”நீதிபதி இடமாற்றம் விவகாரத்தில் மூன்றாம் நபர் வழக்கு தொடர முடியாது.  இடமாற்றம் பரிந்துரையை எதிர்த்து சம்பந்தப்பட்ட நீதிபதி தான் உச்சநீதிமன்றத்தை அணுக முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அமர்வு தஹில் ரமானி இடமாற்றத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை எனவும், வழக்கறிஞர் கற்பகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் உத்தரவிட்டது.