tamilnadu

பணியின்போது தலைமைக் காவலருக்கு மாரடைப்பு

வேலூர், ஏப்.9-குடியாத்தம் தங்கம் நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற உதவி காவல் ஆய்வாளர் லிங்கசாரதி. இவரது மகன் வினோத்குமார்(34).பேர் ணாம்பட்டு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். காவல் நிலையத்தில் பணியிலிருந்தபோது, இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வினோத்குமார், மயக்கமடைந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் மாரடைப்பால் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, வினோத்குமாரின் சடலம் பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மறைந்த வினோத்குமார் கடந்த 2008-ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார். இவருக்கு சுதாராணி என்ற மனைவி உள்ளார்.