மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி வார்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று பிற்பகல் எதிர்பாராத விதமாக 226 வது வார்டு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொள்ளும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் ஏராளமான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.