tamilnadu

img

மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தம்

திருவனந்தபுரம், ஜுலை 30- நாடு முழுவதும் மூன்றரை லட்சம் போலி மருத்துவர்களுக்கு உரிமம் வழங்குவதற்கு வழிவகுக்கும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்களின் 24 மணிநேர வேலை நிறுத்தம் புதனன்று நடைபெறுகிறது. அவசரம், தீவிர சிகிச்சை பிரிவுகளில்  பணியாற்றும் மருத்துவர்கள் தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதில் இந்திய மருத்துவ கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து மருத்துவர்களும் பங்கேற்க உள்ளனர். அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய மருத்துவ சட்டத்திற்கு மருத்துவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. சில மாநிலங்களில் மருத்துவர்களின் சிரமத்தைப் போக்குவதாக கூறி மூன்றரை லட்சம் போலி மருத்துவர்களுக்கு உரிமம் வழங்க இந்த சட்டம் உதவுகிறது. இதன்மூலம் நாட்டின் சுகாதாரத்துறை பெரும் பின்னடைவை சந்திக்கும்.  நாட்டின் பொது சுகாதாரத்திற்கு எதிரான இந்த சவாலை சமூகத்தின் அனைத்துப் பகுதியினரும் எதிர்த்து முறியடிக்க முன்வர வேண்டும். மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் இந்திய மருத்துவர் சங்கம் (ஐஎம்ஏ) கேட்டுக்கொண்டுள்ளது.