நீதிபதி குரியன் ஜோசப் பேச்சு
கொச்சி, டிச.28- நாட்டின் அரசமைப்பு சாசன நிறு வனங்கள் முன்னெப்போதும் இல்லாத அள வுக்கு நம்பிக்கை இழந்துவிட்டதாக உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் கூறினார். கொச்சியில் நடந்து வரும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் 13ஆவது அகில இந்திய மாநாட்டில் வெள்ளியன்று மலை ‘அரசியலமைப்பு எதிர்கொள்ளும் தற்கால நெருக்கடிகள்’ என்கிற தலைப்பில் கருத்த ரங்கு நடைபெற்றது. உச்சநீதிமன்ற முன் னாள் நீதிபதி குரியன் ஜோசப் துவக்கி வைத்து கருத்தரங்கில் பேசியதாவது: அவசரநிலை காலத்தில் அரசமைப்பு சாசன நிறுவனங்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டன. அன்று நீதித்துறை அதன் கடமையை நிறைவேற்றவில்லை. அதன் பாதகமான விளைவை நாடும் மக்களும் அனுபவிக்கும் நிலை ஏற்பட்டது. அரச மைப்பு சாசனம் எதிர்கொள்ளும் பெரிய சவால் நீதிபதிகளின் அரசியல் நியமனமா கும். நீதிபீடத்தின் பாரபட்சமற்ற செயல் பாட்டை அது இடையூறு செய்கிறது. அரசியலமைப்புதான் நாட்டை அதன் மதிப்புகளுடன் நிலைநிறுத்தி வைத்திருக்கி றது. இந்திய அரசமைப்புச் சாசனம் உறுதி யளித்துள்ள சுதந்திரம் அனைவருக்கும் ஒரே விதமான உரிமையாகும். தனிமனிதனின் கவுரவம் அந்நபர் பெறும் சுதந்திரங்களால் தீர்மானிக்கப்படுகிறது. இந்த சுதந்திரம் அவர்களுக்கு கிடைக்கிறதா என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றார். பாசிசம் அதிக தூரத்தில் இல்லை
கருத்தரங்கில் பேசிய முன்னாள் நீதிபதி கே.கே.தினேசன், பாசிசம் அதிக தூரத்தில் இல்லை என்பதை தற்போதைய சூழ்நிலை களிலிருந்து புரிந்துகொள்ளலாம் என்றார். பாசிசம் வெறும் வார்த்தை அல்ல என்பதை அதன் வரலாற்றை ஆய்வு செய்தால் தெரிந்துகொள்ளலாம். நாட்டின் அரச மைப்பு சாசன விழுமியங்களுக்கு எதிராக நடக்கும் தடையற்ற தாக்குதல்கள் கவலை யளிக்கிறது. அரசமைப்புச் சாசனத்தையும் அதன் மரியாதையும் பாதுகாக்க வேண்டி யவர்களே அதற்கு சவாலாக உள்ளனர். தடையற்ற தாக்குதல்களுக்கு ஊக்கம ளிக்கப்படுகிறது. பிரித்து ஆள்வது என்பதே அவர்களது சித்தாந்தம் எனவும் அவர் கூறி னார். சங்கத்தின் அகில இந்திய துணை தலை வர் இ.கே.நாராயணன் கருத்தரங்கிற்கு தலைமை வகித்தார். கேரள அரசின் தலை மை வழக்கறிஞர் சி.பி.சுதாகர்பிரசாத் உள் ளிட்டோர் பேசினர்.