tamilnadu

img

ஸ்டெர்லைட் வழக்கில் நாளை முதல் மீண்டும் விசாரணை தொடக்கம்

உயர்நீதிமன்றம் அறிவிப்பு

தூத்துக்குடி, டிச.14- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொட ரப்பட்ட வழக்கில் டிசம்பர் 16 முதல் 20 ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெறுகிறது. தூத்துக்குடியில் மக்களுக்கும் சுற் றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய வேதாந்தா குழுமத்தின்  ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் ஆவேசப் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத் தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக் கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.   இதன்பின்னர்தான் தமிழக அரசு இந்த ஆலையை சீல் வைத்து மூடியது. ஸ்டெர் லைட் ஆலைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ். அர்ச்சுன னும் வழக்கு தொடர்ந்தார்.  

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை யை மூட எதிர்ப்பு தெரிவித்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவ ஞானம், பவானி சுப்பராயன் அமர்வு விசா ரித்தது. இதனிடையே நீதிபதி சிவஞானம் கடந்த 3 மாதங்களாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளை விசா ரித்து வந்ததால், ஸ்டெர்லைட் வழக்கின் விசாரணை நடைபெறாமல் இருந்தது.  இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக  டிசம்பர் 16 முதல் 20 ஆம் தேதி வரை சென்னை உயர்நீதி மன்றத்தில் மீண்டும் விசாரணை நடை பெறும் என்று உயர்நீதிமன்ற பதிவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.