சென்னை:
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமை மீறல் குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து திமுகவின் 18 எம்.எல்.ஏ.-க்கள் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ரவிச்சந்திரபாபு விலகுவதாக தெரிவித்துள்ளார்.தடை செய்ய குட்காவை சட்டப்பேரவைக்குள் எடுத்து சென்ற.விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம் எல் ஏக்கள் மீது உரிமை மீறல் நோட்டீஸ் கடந்த 2017ம் ஆண்டு அனுப்பப்பட்டது.
இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ-க்களும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வு, உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்தும், புதிதாக நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.இந்நிலையில் உரிமைக் குழு மீண்டும் கூடி இராண்டாவது முறையாக கடந்த செப்டம்பர் 07ஆம் தேதி கூடி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.இந்த நோட்டீஸை எதிர்த்தும், திமுகவின் 18 எம் எல் ஏக்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்நிலையில் வெள்ளியன்று இந்த வழக்குநீதிபதி ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால் வழக்கு விசாரணைக்கு வரும் முன்னதாகவே, நீதிபதி ரவிச்சந்திரபாபு, ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு இதே வழக்கை விசாரித்ததால் தான் இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என தெரிவித்து, வேறு நீதிபதிக்கு பரிந்துரைக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார்.