tamilnadu

img

உயிரிழப்பு இல்லை என்றால் அமைதி நிலவுவதாக அர்த்தமா?

ஸ்ரீநகர்:
காஷ்மீரின் சாலைகளில் உடல் கள் சிதறிக் கிடக்கவில்லை என்பதால் அங்கு அமைதி நிலவுவதாக அர்த்தமில்லை என ஸ்ரீநகர் மேயர் ஜூனைத் அஸிம் மாத்து மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.உணர்வுகளின் மீது ஒரு பெரும் அடக்குமுறையை அமல்படுத்திவிட முடிந்ததாலேயே நிலைமை சாதாரணமாக இருக்கிறது என்று கணக்குப்போட்டு விடாதீர்கள் என்றும் எச்சரித்துள்ளார்.“பல ஆண்டுகளாக, காஷ்மீரில்உள்ள அரசியல் ஆர்வலர்கள் பயங்கரவாத சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்தும், வன்முறையிலிருந்தும் பிரதான நீரோட்டத்தில் தப்பிப் பிழைக் கிறார்கள். ஆனால், இன்று மத்திய ஆட்சியாளர்களால் அவர்கள் வேட்டையாடப்பட்டு இருக்கிறார்கள். ஜம்மு-காஷ்மீரில், தங்களின் அன்புக்கு உரியவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத குடும்பங்கள் இன்னும் நிறைய உள்ளன” என்றும் ஜூனைத் குறிப்பிட்டுள்ளார்.ஜம்மு- காஷ்மீர் மக்கள் மாநாட்டுக்கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும், ஸ்ரீநகர் மேயராகவும் இருக்கும் ஜூனைத் அஸிம் மாத்து, ஜம்மு - காஷ்மீ
ரின் நிலைமையை மத்திய அரசு கையாளுவது குறித்து, தொடர்ந்து கடும் விமர்சனங்களை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.