சிவகாசி, ஜூன் 3- சிவகாசி அருகே உள்ளது வெற்றிலை யூரணி கிராமம். இங்குள்ள கண்மாயில் சட்ட விரோமாக மண் எடுப்பதாக சார் ஆட்சிய ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற சார் ஆட்சியர் தினேஷ் குமாரைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பியோடினர். மண் அள்ள பயன்படுத்திய ஜே.சி.பி வாகனம், ஐந்து டிராக்டர்கள் பறி முதல் செய்யப்பட்டது. மண்ல் அள்ளுவதில் ஈடுபட்ட போத்திராஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்க சார் ஆட்சியர் உத்தரவிட்டார்.