திருப்பூர், ஜூன் 21 – சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகை வாகனங்களாக இயக்கப் படுவதைத் தடுத்து நிறுத் தும்படி சிஐடியு மோட்டார் தொழிலாளர் சங்கம் சார்பில் வட்டாரப் போக்கு வரத்து அலுவலரிடம் முறையிடப்பட்டது. திருப்பூர் வடக்கு வட் டாரப் போக்குவரத்து அலுவலராகப் பொறுப்பேற்ற குமாரை சிஐடியு மோட்டார் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.விஸ்வ நாதன், மாவட்டச் செயலாளர் ஒய்.அன்பு, மாவட்டப் பொருளாளர் அருண் ஆகியோர் வெள்ளியன்று நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது திருப்பூர் மாவட் டத்தில் சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தடை செய்ய கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் திருப்பூரில் ஆம்னி வாகனங்களில் பனியன் நிறுவன ஆடைகள், நூல்கள் உள்ளிட்ட லோடு களை ஏற்றிச் செல்வதால் சரக்கு வாக னங்கள் பாதிக்கப்படுகின்றன. இத னால் சரக்கு வாகனங்களின் வருவாய் பாதிக் கப்படுவதுடன் இதை நம்பி இருக்கும் தொழி லாளர்களுக்கும் வேலைவாய்ப்பு பாதிக் கப்படுகிறது. எனவே அதைத் தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிஐடியு சார்பில் கேட்டுக் கொண்டனர். மேலும் சொந்த வாகனங்களை வாடகைக்கு ஓட்டுவதால் சரக்கு வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர் களுக்கு மட்டும் இழப்பு ஏற்படுவதில்லை, அரசுக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்படு கிறது. எனவே இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக் கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் குமார் தெரிவித்தார்.