tamilnadu

சிவகங்கையில் ஜூன் 4-இல் மனுக்கொடுக்கும் போராட்டம்

சிவகங்கை, மே 24- மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும். தினக்கூலி ரூ256 வழங்கவேண்டும். 55 வயதைக் கடந்த வர்களுக்கும்  வேலை கொடுக்க வேண்டும். கொரோனா நிவாரண நிதியாக விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.7,500  வழங்க வேண்டுமென வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களிடம் ஜூன் 4-ஆம் தேதி மனுக்கொடுக்கும் போராட்டத்தை நடத்துகிறது. இந்த கோரிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட் டம் மாவட்டத் துணைத்தலைவர் வேணுகோபால் தலை மையில் நடைபெற்றது. மாநிலத்தலைவர் ஏ.லாசர், மாவட்ட செயலாளர் மணியம்மா, மாவட்டத் துணைச் செயலாளர் முத்துக்கருப்பு,மாவட்ட பொருளாளர் வேங்கையா ஆகி யோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.