tamilnadu

img

அவிநாசி அருகே சாலை விபத்து: கல்லூரி மாணவர்கள் 6 பேர் பலி

அவிநாசி, மார்ச் 19- அவிநாசி அருகே  தேசிய நெடுஞ்சாலையில் வியாழனன்று அதிகாலை சிமெண்ட் லாரி மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் உயிரிழந்தனர். சேலம் தனியார்  கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் 6 பேர் உதகைக்கு சுற்றுலா செல்ல ஒரு காரில்  பயணம் செய்தனர். அந்த கார் அவிநாசி அருகே வந்தபோது  முன்னே சென்ற சிமெண்ட் லாரி மீது எதிர்பாராத விதமாக  மோதியது. இந்த விபத்தில் காரில் சென்று மாணவர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விசாரணையில் இவர்கள் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ராஜேஷ் (21), சூர்யா (21), வெங்கட் (21), சின்னசேலத்தைச் சேர்ந்த இளவரசன் (21), வசந்த் (21), சந்தோஷ் (22), தருமபுரியைச் சேர்ந்த கார்த்தி  (21) எனத் தெரியவந்துள்ளது.  இத்தகவலறிந்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய் கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீக்சா மிடல் ஆகியோர் விபத்து நடைபெற்ற இடம் மற்றும் அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டனர். இது குறித்து அவிநாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.