tamilnadu

img

சேலம் திமுக வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிர பிரச்சாரம்

சேலம், ஏப்.14-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. சேலம் தாலுகாவிற்கு உட்பட்ட கொல்லப்பட்டி, மோகன் நகர், ஸ்டீல் பிளான்ட், வேம்படிதாளம், வேடுகத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் நடைபெற்றது. இப்பிரச்சாராத்திற்கு சிபிஎம் தாலுகா செயலாளர் சுந்தரம் தலைமை வகித்தார். இதில், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.பன்னீர் செல்வம், பரமேஸ்வரி, பி.சந்திரன், சண்முகம், ரவி சங்கர், மயில்வேலன் மற்றும் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பனமரத்துப்பட்டி

பனமரத்துப்பட்டி பகுதியில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மாவட்ட குழு உறுப்பினர் டி.பரமேஸ்வரி மற்றும் குமார், மாரியப்பன், கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நங்கவள்ளி

நங்கவள்ளி ஒன்றியத்தில் நடைபெற்ற பிரச்சார இயங்கத்திற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர் கே.ராஜாத்தி மற்றும் மேவை.சண்முகராஜா, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் கவிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேட்டூர்

மேட்டூர் நகரப்பகுதிகளில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமாருக்கு ஆதரவாக மேட்டூர் சிபிஎம் செயலாளர் வசந்தி தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட குழு உறுப்பினர் வி.இளங்கோ, மின் அரங்க இடைக் கமிட்டி செயலாளர் செல்வநாதன் மற்றும் சி.கருப்பன்னன் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர். வேன் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் மேட்டூர் நால்ரோடு, பணிமனை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச்சேகரித்தனர்.