சேலம், ஜூன் 10- இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சேலம் விபி சிந்தன் நினை வகத்தில் நடைபெற்றது. இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு சார்பில் கொரோனா வைரஸ் ஊர டங்கினால் பாதிக்கப்பட்ட ஆட்டோ தொழி லாளர்கள், சாலையோர வியாபாரிகள் உள் ளிட்டவர்களுக்கு இந்திய வங்கி ஊழியர் சம் மேளனம் சார்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு கள் வழங்கப்பட்டது.
ஜவுளி சங்க செயலாளர் பி.ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வங்கி ஊழியர் சம்மேளன சேலம் மாவட்ட தலைவர் எம். பாலசுப்பிரமணியம், மாவட் டச் செயலாளர் எஸ்.தீனதயாளன், மாநில செயலாளர் எஸ்.ஏ.ராஜேந்திரன், சேலம் நாமக்கல் நகர கூட்டுறவு வங்கி சங்கத்தின் செயலாளர் ஜே.பாலு, தலைவர் எஸ்.சிவ சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். இதில், 95 பயனாளிகளுக்கு ரூ.75 ஆயி ரம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங் கப்பட்டது.