சேலம், மே 24-சேலத்தில் ஓய்வூதியர் சங்க மாநில மாநாட்டையொட்டி வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 3 ஆவது மாநில மாநாடு சேலத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இதையொட்டி அதற்கான வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம் சேலம் சௌடாம்பிகா அரங்கில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பொன்னுசாமி தலைமையில் நடைபெற்றது. கே.தியாகராஜன் வரவேற்புரையாற்றினார். இதில் மாநிலதலைவர் நெ.இல.சீதரன், பொதுச்செயலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் என்.ஜெயச்சந்திரன், துணைத்தலைவர் ஆர்.ஜோதி, மாநிலச் செயலாளர் எம்.முருகேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இதைத்தொடர்ந்து வரவேற்புக்குழுவின் தலைவராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகபெருமாள், செயலாளராக ஆர்.சுப்பரமணியம், பொருளாளராக ஏ.அருணகிரி மற்றும் ஒருங்கிணைப்பாளராக முருகேசன் ஆகியோர்தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், துணைத்தலைவர்கள், இணைச்செயலாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட 100பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது.முன்னதாக, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், தமிழ் மாநில ஓய்வூதியர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் அங்கப்பன், மத்திய, மாநில ஓய்வூதியர் ஒருங்கிணைப்புக்குழுவின் மாவட்டச் செயலாளர் சேஷகிரி, அஞ்சல் ஓய்வூதியர் சங்க கோட்டச் செயலாளர் என்.சண்முகம், ஊரக வளர்ச்சித்துறை என்.திருவேரங்கன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்த வரவேற்புக்குழு அமைப்பு கூட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.