இளம்பிள்ளை, மார்ச் 1- இளம்பிள்ளை அருகே உள்ள தப்பக்குட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ் சித்த மருத்துவ விழிப் புணர்வு முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த தப்பக்குட்டைஅரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய ஆயுஷ் திட்டத்தின்கீழ் சித்த மருத்துவ விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தப்பக்குட்டை ஊராட்சி மன்றத் தலைவர் விஜயாதங்கராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் சித்த மருத்துவ முகாம் நடை பெற்றது. இம்முகாமில் சித்த மருத்துவர் ராமு (மகுடஞ்சாவடி), சரவணன் (இ.காட்டூர்), வட்டார சுகாதார மேற் பார்வையாளர் சுசீந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் தங்கவேல், மணிகண்டன், செல்வராஜ், காசநோய் பிரிவு மேற்பார்வை யாளர் சபரீசன், ராஜேஷ்வர்மா, கிராம சுகாதார செவிலியர் நிர்மலா, பள்ளி தலைமையாசிரியர் சந்திரசேகர் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த சித்த மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் இயற்கை உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் சித்த மருத்துவ முறைகள் குறித்தும், தங்களது வீடுகளிலேயே மூலிகைகளை வளர்த்து அதன் மூலம் சிறு, சிறு நோயி னைத் தீர்க்க வழி முறைகள் குறித்து மகுடஞ் சாவடி சித்தமருத்துவர் ராமு எடுத்து ரைத்தார்.