tamilnadu

img

சாலையோர வியாபாரிகளை கடை வைக்க விடாமல் காவல்துறை அராஜகம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்

சேலம், ஜூன் 8- சாலையோர வியாபாரி களை கடை வைக்க விடா மல் காவல் துறையினர் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டதால் வியாபாரிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.

சேலம் மாநகரம் சின்ன கடை வீதி, அக்ரஹாரம், பழைய பேருந்து நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகள் செயல் பட்டு வந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 144 தடை இருந்ததால் கடைகள் திறக்கப்படாமல் இருந்த நிலை யில், தற்போது அரசு அறிவித்த தளர்வுக ளில் பல்வேறு கடைகள் திறக்கப்பட்டது. இதனால் மீண்டும் சாலையோரக் கடை கள் ஏற்கனவே இருந்த இடங்களில் செயல் பட துவங்கியது. இந்நிலையில், சேலம் டவுன் காவல் நிலைய காவலர்கள் தொடர்ந்து கடைகளை வைக்க கூடாது எனவும், விற்பனைக்காக வைக்கப்பட்டிருக் கும் பொருட்களை சேதப்படுத்தி வருவதாக வும் குற்றச்சாட்டி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்ட னர். மேலும் இதுகுறித்து சாலையோர வியா பாரிகள் தெரிவிக்கையில், தங்களின் வாழ் வாதாரம் இந்த சாலையோரக் கடைகளை நம்பி தான் உள்ளது.

மாநகராட்சியிடம், பாத் திர வியாபாரிகள் அடையாள அட்டை வாங் கியும், அங்கு குத்தகைக்கு எடுத்தவர்களிடம் தினமும் ரூ.150 வரை கட்டணம் செலுத் தியும் தான் இந்த கடைகளை நாங்கள் வைத் துள்ளோம். ஏற்கனவே எங்களின் வாழ்வா தாரம் பாதித்துள்ள நிலையில், இனி  வரும் காலங்களில் குடும்பங்களை நடத்த கடைகளை வைத்தால் மட்டுமே வாழ முடியும் சூழல் உள்ளது. ஆனால் காவல்து றையினர் தொடர்ந்து எங்களுக்குத் தொந்த ரவு அளித்து வருகிறார்கள்.

இதனால் நாங் கள் மனவுளைச்சலுக்கு ஆளாவதுடன், வியாபாரமும் சரியாக செய்ய முடிவ தில்லை. எனவே, இதனை தடுக்க மாவட்ட  ஆட்சியர் நடவடிக்கை எடுத்து, ஏற்கனவே நாங்கள் வைத்திருந்த இடத்திலேயே கடைகளை வைக்க அனுமதியும் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.