tamilnadu

img

நூறு நாள் வேலையை முழுமையாக வழங்கிடுக

சேலம், ஜூன் 17- கிராமத்தில் உள்ள விவசாய தொழி லாளர்களுக்கு நூறு நாள் வேலை திட்டத் தில் முழுமையாக வேலை வழங்க வேண் டும் என  வலியுறுத்தி அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்க பேரவையில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வாழப் பாடி தாலுகா பேரவை கே.ராஜா தலைமை யில் நடைபெற்றது. இதில், விவசாய தொழி லாளர் சங்க மாவட்ட தலைவர் வி.தங்க வேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் அன்பழகன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். குழந்தைவேல், சிபிஎம் தாலுகா செய லாளர் வி.பழனிமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினார். இதில், கிராமத்தில் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு நூறு நாள் வேலை திட்டத்தில் முழுமையாக வேலை வழங்க வேண்டும். சம்பளம் உயர்த்தி தர வேண்டும். குடிநீர் இல்லாத ஊராட்சி களுக்கு போர்க்கால அடிப்படையில் குடிநீர் ஏற்பாடு செய்ய வேண்டும். மே 18 ஆம் தேதியன்று தேர்தல் பொது விடு முறை அன்று 100 நாள் வேலை அட்டை  பெற்றுள்ள அனைவருக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. இதில், புதிய தலைவராக பி.ராஜா, செய லாளராக சி.மாணிக்கம், பொருளாளராக வி.மாரியம்மாள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட புதிய கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.