tamilnadu

img

மத்திய அரசின் சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை திரும்பப் பெறுக மாவட்ட ஆட்சியரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு

சேலம், ஆக. 3- சேலம் – சென்னை எட்டு வழிச் சாலையை நடைமுறைப்படுத் தப்படும் வகையில் மத்திய அரசு  கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் அறிக்கையை தாக்கல் அறிவிக் கையை திரும்பப் பெற வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் நாடாளு மன்ற உறுப்பினர்கள் மனு அளித்த னர். சேலம் - சென்னை இடையேயான  எட்டு வழிச் சாலை திட்டத்தை நடைமு றைப்படுத்த மத்திய, மாநில அரசு கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எட்டு  வழிச் சாலைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங் குவதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூ ழல் அறிக்கை தேவையில்லை என  மத்திய அரசு சமீபத்தில் சுற்றுச்சூழல்  அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையின் மூலம் அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றி லும் பாதிக்கப்படும்.  எனவே, இத்திட்டத்தை திரும்ப் பப்பெற வலியுறுத்தி எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்க விவசாயி கள் சேலம், தருமபுரி மற்றும் நாமக் கல் ஆகிய தொகுதி நாடாளுமன்ற  உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதைய டுத்து, தருமபுரி நடாளுமன்ற உறுப்பி னர் செ.செந்தில்குமார், சேலம் நாடா ளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் கள்ளக்குறிச்சி நடாளுமன்ற  உறுப்பினர் பி.கௌ தம சிகாமணி ஆகியோர் சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமனை நேரில் சந்தித்து திட்டத்தை கைவிடக் கோரி மனு அளித்தனர்.  முன்னதாக, மனு அளிக்க வந்த வர்களை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் உள்ளே நுழைய அனுமதிக் காமல் காவல்துறையினர்  தடுத்து  நிறுத்தினர். மேலும், குறைவான நபர்கள் மட்டுமே மனு அளிக்க செல்ல வேண்டும் என தெரிவித்த தால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து நடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விவசாயி கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தனர்.