tamilnadu

img

சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு ஜோதி பயணக்குழுவிற்கு சேலம், தருமபுரியில் எழுச்சிமிகு வரவேற்பு

சேலம், ஜன. 21- சின்னியம்பாளையம் தியாகி கள் நினைவு ஜோதி பயணகு ழுவிற்கு சேலம், தருமபுரி மாவட் டங்களில் உற்சாக வரவேற்பளிக் கப்பட்டது. சிஐடியு அகில இந்திய மாநாடு ஜன.23ஆம் தேதி முதல் ஜன.27 வரை சென்னையில் நடைபெறு கிறது. இம்மாநாட்டின் ஒரு பகுதி யாக கோவையிலிருந்து புறப் பட்ட சின்னியம்பாளையம் தியாகி கள் நினைவு ஜோதி பயணகுழு வினருக்கு சேலம் மாவட்டத்தில் உற்ச்சாக வரவேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, சிஐடியு மாவட்ட தலைவர் பொ.பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாநிலக்குழு உறுப் பினர்கள் எஸ்.கே.தியாகராஜன், ஏ.கோவிந்தன், வீ.இளங்கோ, ஆர்.வைரமணி மற்றும் சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எம்.குணசேகரன், ஐ. ஞானசெளந்தரி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.சந்திரன் எம்.கனகராஜ், பி.பாலகிருஷ்ணன், உள்ளிட்ட அனைத்து சங்க மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஓமலூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு கைத்தறி சங்க செய லாளர் எஸ். சண்முகம் தலைமை வகித்தார். இதில் ஐஓசி சங்க நிர்வாகி சேகர் போக்குவரத்து கழ கம் சார்பில் சந்திரன் சிபிஎம் தாலுகா செயலாளர் பி. அரியா கவுண்டர், தாலுகா குழு உறுப்பி னர் சின்ராஜ் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர். இப்பி ரச்சார பயணம் சேலம் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் போக்கு வரத்து பணிமனை, செவ்வாய் பேட்டை, ஜங்ஷன் உழவர் சந்தை, ஓமலூர், தீவட்டிப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றது.
 தருமபுரி
கோவை சின்னியம்பாளை யம் தியாகிகள் நினைவு ஜோதி பயணத்துக்கு தருமபுரி மாவடட் டத்தில் உற்சாக வரவேற்பு அளிக் கப்பட்டது. நல்லம்பள்ளி பேருந்து நிலை யத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு மாவட்டதலைவர் ஜி. நாகராஜன் தலைமை வகித்தார். பயணக்குழு தலைவர் சிஐடியு மாநிலசெயலாளர் கிருஷ்ண மூர்த்தியிடமிருந்து சின்னியம் பாளையம் தியாகிகள் ஜோதியை சிஐடியு மாநிலசெயலாளர் சி. நாகராசன் பெற்றுக்கொண்டார். பின்னர் தருமபுரி தொலை பேசி நிலையம் முன்பு நடைபெற்ற வரவேற்ப்பு நிகழ்ச்சிக்கு சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் சி.கலா வதி தலைமை வகித்தார். பயணக் குழு தலைவர் சிஐடியு மாநில செயலாளர் கிருஷணமூர்த்தி ,சிஐ டியுமாநிலசெயலாளர் சி.நாக ராசன் ,மாவட்டபொருளாளர் ஏ. தெய்வாணை ,மாவட்டதுணைத்த லைவர் எம்.மாரிமுத்து ,மாவட்ட நிர்வாகிகள் பி.ஆறுமுகம், சி. முரளி, எஸ்.சண்முகம் சி.ரகுபதி, சி. ராஜி, ஆரோக்கியதாஸ், பெரு மாள் ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக, தருமபுரி மாவட்ட குழுவினர் சிஐடியு நிறுவன தலை வர் கே.எம்.ஹரிபட் நினைவு ஜோதியை, பயணக்குழு தலைவர் சிஐடியு மாநிலசெயலாளர் கிருஷ் ணமூர்த்தி பெற்றுக்கொண்டார்.