சேலம், செப். 9- பழுதடைந்த சாலையை சீர்படுத்த வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கடந்த செப். 4 ஆம் தேதியன்று நாற்று நடும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் வெற்றியாக சேலம் மாநகராட்சி நிர்வாகத்தினர் சாலை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். சேலம் மாநகரம், 24 ஆவது டிவிஷன், மூலப் பிள்ளை யார் கோவில், பிள்ளையார் நகர் பகுதியில் பல மாதங்க ளாக சாலைகளை சீர்படுத்தாமல் மாநகராட்சி நிர்வாகத்தி னர் கிடப்பில் போட்டனர். இதனால், சாலைகளில் மழை நீர் தேங்கி நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இது தொடர்பாக இப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி அதி காரிகளிடம் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மேற்கு மாநகர குழுவினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து பழுதடைந்த மண் சாலையில் நாற்று நடும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அங்கு பேச்சுவார்த்தைக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் இரண்டு நாட்களில் சாலையை சரி செய்து தர உத்தரவாதம் அளித்தனர். அதனடிப்படை யில், செவ்வாயன்று சாலை அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகத்தினர் துவங்கினர். சாலை வசதி கிடைத்தால் அப்பகுதி மக்கள் வாலிபர் சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.