இளம்பிள்ளை, ஜூன் 30- இளம்பிள்ளை அருகே இளம்பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அப்ப குதியில் கிருமி நாசினி தெளிக் கப்பட்டது. சேலம் மாவட்டம், இளம் பிள்ளை அருகே உள்ள ஏகாபு ரம் ஊராட்சிக்குட்பட்ட களியக வுண்டனூர் பகுதியில் வசிக் கும் இளம்பெண் ஒருவர், தனது கணவரு டன் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத் திற்கு சென்று விட்டு கடந்த வாரம் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்று இருக்குமோ என பயந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் அப்பெண் மற்றும் அவரது கண வர் ஆகியோருக்கு சளி மாதிரி பரிசோ தனை செய்து கொண்டனர்.
இதில், அப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வசித்து வந்த பகுதியில் 29 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அப்ப குதியில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கிருமி நாசினி மருந்து தெளிக்கக்கப்பட்டது.