tamilnadu

img

கொரோனா உயிரிழப்புகள் செயில் நிர்வாகத்தின் மெத்தனத்தை உலுக்கிய வேலைநிறுத்தம்

கொரோனா தொற்று பரவலாக இருந்த கால கட்டத்திலேயே, பொருளாதார மற்றும் உற்பத்தி நட வடிக்கைகள் துவக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவிற்கேற்ப செயில் நிறுவனத்தின் உருக்காலை கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் மே மாத துவக்கத் திலேயே  உற்பத்திப் பணிகள் துவக்கப் பட்டது. இதன்பின் படிப்படியாக ஜூன் மாதம் முதற்கொண்டு  90 சத விகிதத்திற்கும் மேல் உற்பத்தி இலக் குகள் எட்டப்பட்டன. 100 சதவிகித நிரந்தர மற்றும் கான்ட்ராக்ட்   தொழி லாளர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். அதேநேரம், நோய்த் தொற்று இந்திய அளவில் கடுமை யாக உயர்ந்து வந்த நிலையிலும் ஆலை மற்றும் நகரிய குடியிருப்புப் பகுதிகளில் நோய்த் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கும், உரிய கோவிட் மருத்தவப் பரிசோதனை கள் மற்றும் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை உத்தரவாதப்படுத்திட வும் செயில் நிர்வாகம், போதிய நிதி ஆதாரங்களை ஒதுக்கி   உரிய நடவ டிக்கைகளை  மேற்கொள்ள முனைப் புக் காட்டவில்லை.

 மாறாக, உற்பத்தி,  உற்பத்தி என்ற கூக்குரல்தான் பெரிதாக ஒலித்ததே தவிர பெரும் நோய்த் தொற்றிலி ருந்து  தொழிலாளர்களின் நலனைக் காத்திடு என்ற நியாயமான குரலை செயில் நிர்வாகம் செவிமடுக்க வில்லை. கடந்த இரண்டு ஆண்டு களில் தொடர்ச்சியாக இரண்டா யிரம் கோடிக்கும் மேல் லாபமீட்டி யும், செயில் நிர்வாகத்தின்  அலட்சிய முகமே வெளிப்பட்டது.  இதன்காரணமாக உருக்காலை யில் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, இறப் பின் விளிம்பில் இருக்கக்கூடிய  தொழிலாளர்களின் எண்ணிக்கை யும்  நாளும் உயர்ந்து கொண்டே வரு கிறது. இத்தகைய சூழலில்தான் சேலம் உருக்காலையில் எம்.ஆர்.கண்ணன், ஸ்ரீ சோமேஷ்வர ராவ் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதே போல், பிலாய் உருக்காலையில்  ஒரே நாளில் 4 பேர் உயிரிழப்பு என ஆலைச் சூழல் அச்சச் சூழலாக மாறி வருகி றது.

 இவ்வாறு அனைத்து பொதுத் துறை உருக்காலைகளிலும் முப்ப துக்கும்  மேற்பட்ட நிரந்தர மற்றும் கான்ட்ராக்ட் தொழிலாளர்கள் கடந்த மூன்று மாதங்களில் கொரோ னாவின் கோரப்பிடியில்   சிக்கி மரண மடைந்துள்ளனர்.   இப்பின்னணியில்தான், கொரோனா தொற்று காரணமாக உயி ரிழக்கும் நிலக்கரித் துறை, ஏர் இந்தியாவின் ஏஐஏஎஸ்எல் (AIASL) நிறுவனத் தொழிலாளர்  குடும்பங்க ளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத் திட,  கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும் என அறிவிப்பு வந்தது. அதேநேரம், உருக்குத் தொழிலா ளர்களின் குடும்பத்திற்கும் இந்த பாதுகாப்பு  வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை செயில் நிர்வா கம் ஏற்கவில்லை. இதன் காரண மாக அனைத்து உருக்காலைகளி லும் கொந்தளிப்பான சூழல் நிலவி வந்த பின்னணியில்தான்,  சேலம்  உருக்காலையின் ஒட்டு மொத்த தொழிலாளர்களும், தொழிற் சங் கங்களும் செயில் நிர்வாகத்தின் மெத்தனப் போக்கை உலுக்குகின்ற வகையில் செப். 19 ஆம் தேதியன்று மதியம்  துவங்கி, செப் 21 நள்ளிரவு வரை மூன்று நாள் வேலை நிறுத்தம் மற்றும் தொடர் ஆலை வாயிற் முற் றுகைப் போராட்டத்திற்கு தள்ளப் பட்டார்கள்.  

மூன்று நாள் போராட்ட களத்தில், சிஐடியு பொதுச் செயலாளர், உருக் குத் தொழிலாளர் சம்மேளனத் தலை வர் தபன்சென், ஐஎன்டியுசி, தொமுச மற்றும் அகில இந்திய தொழிற்சங்கத் தலைவர்கள் தலையீடு செய்து செயில் நிறுவன  சேர்மனிடம் பிரச்ச னைக்கு தீர்வு காண வலியுறுத்தினர்.  இப்பின்னணியில், சேலம் உருக் காலை நிர்வாகத்திடம் செப்.21 நள்ளி ரவு நடைபெற்ற பேச்சுவார்த்தை  அடிப்படையில் செயிலின் தேசிய உருக்குத் தொழிலுக்கான கூட்டுக் கமிட்டியில் (National Joint Committee for the Steel Industry - NJCS) கோரிக்கையை விவாதித்து பணி நியமனம் மற்றும் இழப்பீடு குறித்து தீர்வுகாண நிர் வாகம் முன்வந்துள்ளது. கருணை இல்லா ஆட்சியா ளர்கள் கோலோச்சுகின்ற காலத்தில், கருணையற்ற கொரோனாவின் மர ணப் பிடியில் மாண்டு போகும் தொழி லாளர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் வேலை கிடைத்திட வேலை நிறுத்தமே தடுப்பு மருந் தாக, தற்காப்பு ஆயுதமாக விளங்கு கிறது.  இவ்வாறு தொழிலாளர் நலன்க ளுக்கு  எதிரான தடைகளை  உடைப் போம்! எதிர்த்து முன்னேறுவோம்!!!

 -பொ.பன்னீர் செல்வம், உதவி தலைவர், இந்திய உருக்குத் தொழிலாளர்கள் சம்மேளனம், சிஐடியு