tamilnadu

img

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூன் 23-  பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து சாலை போக்கு வரத்து மற்றும் ஆட்டோ தொழிற்சங் கத்தின் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத னால் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு வருகின்ற னர். இந்நிலையில் மத்திய அரசு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலையை உயர்வை கடுமையாக உயர்த்தி வருகிறது.

இதனால் அத்தி யாவசிய பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு உள்ளதால் பொது மக்கள் பெரும் அதிர்ச்சியடைந் துள்ளனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தக் கூடாது. எப்.சி, இன்சூரன்ஸ், டோல்கேட் கட்டணங்களை 6 மாதம் காலம் வரை வசூலிக்கக் கூடாது. கொரோனா நிவாரண நிதியாக ரூ.7  ஆயிரத்து 500 வழங்க வேண்டு உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சேலம் மாவட்ட சாலை போக் குவரத்து மற்றும் மோட்டார் தொழி லாளர் சங்கம் , சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் சேலம் புதிய பேருந்து நிலையம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஆட்டோ சங்கத்தின் மாவட்ட செய லாளர் நாகராஜ் தலைமை வகித் தார். இதில்,  சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, சாலைப் போக்குவரத்து சங்கத்தின் பொருளாளர் வேலு மணி, துணைத்தலைவர் சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்று கோரிக் கைகளை வலியுறுத்தி முழக்கங் களை எழுப்பினர்.

திருப்பூர்

பெட்ரோல், டீசல் விலையேற் றத்தைக் கண்டித்து திருப்பூர் ராய புரம், சிவன் தியேட்டர் அருகில், மரு தாசலபுரம், மிஷின் வீதி, புஷ்பா நகர், எம்பிஎஸ் ஹோட்டல் நிறுத் தம் உள்ளிட்ட ஆறு இடங்களில் சிஐ டியு மோட்டார் மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத் தலைவர் டி.வி.சுகுமார், நிர்வாகிகள் செந்தில் குமார், பெருமாள், மோட்டார் சங்க மாவட்டத் தலைவர் விஸ்வநாதன், மாவட்டச் செயலாளர் அன்பு, மாவட்டப் பொருளாளர் அருண், மாவட்ட துணைத் தலைவர் லாரன்ஸ், ஜெயக்குமார், முத்துச் சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.