tamilnadu

img

எட்டு வழிச்சாலையை ரத்து செய்திடுக விவசாயிகள் நூதனப் போராட்டம்

சேலம், ஆக. 6- சேலம் – சென்னை எட்டு வழிச் சாலைத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் விளை நிலங்களில் மண்டியிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சேலம் - சென்னை இடையே 277 கி.மீ எட்டு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்திற்காக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திரு வண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் என் பதால், இத்திட்டத்திற்கு 5 மாவட்ட விவ சாயிகள், பொதுமக்கள் மற்றும் அர சியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், எட்டுவழிச் சாலை தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பான இறுதித் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வரவுள்ளது. ஆகவே, இத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சேலத்தில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட விவ சாயிகள் தங்கள் விவசாய விளை நிலங் களில் மண்டியிட்டு மடிப்பிச்சை கேட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சேலம் மாவட்டம், ஆச்சாங்குட்டப் பட்டி, அடிமலைபுதூர்,  நாழிக்கல்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் செவ்வா யன்று நூதனப் போராட்டத்தில் ஈடு பட்டனர்.