சேலம், ஜூலை 24- வருமான வரித்துறையின் 159 ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் சேலம் வரு மானவரித்துறை அலுவலர்கள் விழிப்புணர்வு நடைப் பயணம் புதனன்று நடைபெற்றது. இந்திய வருமானவரித் துறையின் 159 ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக சேலத் தில் வருமான வரித்துறை அதிகாரிகள், ஊழியர்கள், மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள், தணிக்கையா ளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற டேக்ஸத்தான் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. சேலம் வருமானவரித்துறை அலுவலகம் முன்பு வருமான வரித்துறை ஆணையாளர் கொடிய சைத்து விழிப்புணர்வு நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார். சேலம் ராமகிருஷ்ணா ரோடு, அஸ்தம்பட்டி, காந்தி ரோடு வழியாக மூன்று கிலோ மீட்டர் தொலை விற்கு டேக்ஸத்தான் விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொண்டு வருமான வரித்துறை அலுவலகத்தில் முடிவடைந்தது. இவ்விழாவில் வருமான வரித்துறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.