tamilnadu

img

மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

இளம்பிள்ளை, ஜன. 27- இளம்பிள்ளை அருகே மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அரசு சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே சந்தைப்பேட்டை பகுதியில்  ஞாயிறன்று  மதுபா னங்கள் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அரசு சார்பில் விழிப்பு ணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சி சேலம்(கலால்) உதவி கோட்ட அலுவலர் செல்வி துவக்கி வைத்தார். இதில், மதுவிலக்கு துணை ஆய்வாளர் பெரிய தம்பி, காவலர் ஈஸ்வ ரன், இளம்பிள்ளை விஏஓ செல்வகுமார் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இந்த கலை நிகழ்ச்சி யின் மூலம் மதுபானங்கள், கள்ளச்சாராயம் உட் கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், இதனால் ஏற்படும் விபத்து, குடும்பத்தில் நடைபெ றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும்  கலைக்கு ழுவினர் நாடகம் மூலம் நிகழ்த்தி வந்தனர். இங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் கொடுத்து  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.