ஜெய்ப்பூர்:
குஜராத் மாநிலத்தில், சர்தார் வல்லபாய் படேலுக்கு, ரூ. 2 ஆயிரத்து 989 கோடி செலவில், 562 உயரத்திற்கு சிலை நிறுவப்பட்டது. அதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரத்தில் சத்ரபதி சிவாஜிக்கும், உத்தரப்பிரதேசத்தில் ராமருக்கும் சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ராஜஸ்தானில் உள்ள நதட்வாரா பகுதியில் 351 அடி உயரத்தில் சிவனுக்கு சிலை அமைக்கும் துவங்கப்பட்டுள்ளது. உலகின் நான்காவது பெரிய சிலையாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.