புதுச்சேரி, ஏப்.18- புதுச்சேரியில் தனியார் மருத்துவமனைகளை திறக்காவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா முன்னெச்சரிக்கை யாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதால் தனி யார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் மூடப் பட்டது. இந்நிலையில் இவைகள் செயல்பட தடை யில்லை என அரசு அறிவித்திருந்தும் சில தனியார் மருத்துவமனைகள் திறக்கப்படாமல் உள்ளது. ஆகவே பொது மருத்துவம் பார்க்கும் வகையில் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைகள், க்ளினிக்குகள் திறக்க வேண்டும்; இல்லையெனில் அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும் என முதல மைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
மேலும் புதுச்சேரியில் உள்ள அனைத்து பொது மருத்துவமனைக ளிலும் வெளிப்புற சிகிச்சை பிரிவு செயல்படத் தொடங்கி விட்டதாக வும், மருத்துவர்களோ பணியாளர்களோ பணிக்கு வரவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் எனவும் முதலமைச்சர் நாராயணசாமி எச்ச ரித்துள்ளார்.