தஞ்சாவூர், செப்.11- தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரை கீழணையிலிருந்து பாசனத்திற்காக புதன்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி டெல்டா பாசன விவசாயத்திற் காக கடந்த ஆக.13 அன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை யிலிருந்து அணைக்கரை கீழணைக்கு வந்து தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் புதன்கிழமை பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது. கீழணையிலிருந்து வடவாறு வாய்க்காலில் 1,800 கன அடியும், வடக்கு ராஜன் வாய்க்காலில் 400 கன அடியும், தெற்கு ராஜன் வாய்க்காலில் 400 கன அடியும் என மொத்தம் 2,600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கீழணை தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி யில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தஞ்சாவூர் ஆ.அண்ணாதுரை, கடலூர் அன்புசெல்வன், நாகப்பட்டினம் சுரேஷ், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஆர்.கே.பாரதிமோகன், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். கீழணையிலிருந்து திறக்கப்பட் டுள்ள 250 கனஅடி தண்ணீரின் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் கீழ்ராமன் வாய்க்கால், குமுக்கிமன்னியார் வாய்க்கால் மற்றும் மேல்ராமன் வாய்க்கால் வாயிலாக 9,000 ஏக்கர் விளைநிலங்கள் நேரடி பாசன வசதிபெறும். மேலும், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களிலுள்ள விளைநிலங்களும் பாசன வசதி பெறும்.