சென்னை,டிச.15- மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2017-18, 2018-19 ஆம் கல்வி யாண்டில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு நாளைக்குள் (திங்கள்) மடிக்கணினி வழங்க வேண்டும். மாணவர்களிடம் போனஃபைட் சான்றிதழ் பெற்றுக் கொண்டு மடிக்கணினி வழங்க வேண்டும். மேலும் இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலு வலர், பள்ளி தலைமை ஆசிரி யர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அடையாதவர்களுக்கும், உயர்கல்வி பயிலாதவர்களுக் கும் மடிக்கணிணி வழங்கப் படாது. மாணவர்களுக்கு மடிக் கணிணி வழங்கப்பட்ட பிறகு, கூடுதலாக தேவைப்பட்டால் டிசம்பர் 17 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரி வித்துள்ளது.