சென்னை,நவ.13- உள்ளாட்சித் தேர்தல் முன்னேற் பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்க ளுடன் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி வியாழன் முதல் 3 நாட்களுக்கு ஆலோசனை நடத்துகிறார். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் முதல் நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். மறுநாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் ஆட்சியர்களுடனும் 16ஆம் தேதி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார்.