https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury
தனக்குச் சாதகமான தலைப்புச் செய்திகளை உருவாக்குவதும் தரவுகளில் தில்லு முல்லு செய்வதும் மோடி அரசாங்கத்தின் அக்மார்க் முத்திரை! இந்தியா மிகக்குறைவான கோவிட் பரிசோதனைகளை செய்கிறது. பத்து லட்சம் பேருக்கு இங்கிலாந்து 2,70,146 பரிசோதனை களை செய்கிறது. ரஷ்யா 2,11,044, அமெரிக்கா 1,97,556 பரிசோதனைகளை செய்கின்றன. வளரும் நாடுகளான சிலி 96,235, பெரு 77,943, துருக்கி 62,341, பிரேசில் 62,201, தென் ஆப்பிரிக்கா 54,735 பரிசோதனைகள் செய்கின்றன. இந்தியா 17,795 மட்டுமே செய்கிறது.மிகவும் குறைவான பரிசோதனைகளை செய்தாலும் இந்தியாவில்தான் தொற்று அதிகரிக்கும் விகிதாச்சாரம் உலகிலேயே அதிகமாக உள்ளது. பரிசோதனைகள், தனிமைப்படுத்துதல், தொற்று தொடர்புகளை கண்டறிதல் ஆகியவற்றுக்கு போதுமான நிதி ஒதுக்கப்பட வேண்டும். மக்களின் உயிர்கள் காக்கப்பட வேண்டும்.
கோவிட் தொற்றும் மரணங்களும் செங்குத்தாக உயர்ந்து கொண்டிருக்கும் வேளையில் பொருளாதாரம் பாதாளத்தில் வீழ்ந்துகொண்டுள்ளது. மக்களின் கைகளில் நேரடியாக பணத்தை தாருங்கள்; இலவச உணவை கொடுங்கள். அவர்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும்பொழுது பொருளதாரம் மீட்சி பாதையில் பயணிக்க தொடங்கும்.
மோடி ஆட்சியில் எளிதாக தொழில் தொடங்குவது என்பதன் பொருள் கார்ப்பரேட்டுகள் இயற்கை வளங்களை எளிதாக கொள்ளை அடிப்பது என்பதாகும். கார்ப்பரேட்டுகளின் இலாப வெறிக்காக பழமையான காடுகள் கூட அழிக்கப்படுகின்றன. கார்ப்பரேட்டுகளின் கொள்ளையை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை ( EIA)- 2020 மேலும் அதிகரிக்கும். எனவே இது திரும்பப்பெறப்பட வேண்டும்.