tamilnadu

img

பாத்திமா லத்தீப் தற்கொலை: நீதி விசாரணை தேவை

வாலிபர் சங்க கண்டனக் கூட்டத்தில் வலியுறுத்தல்

சென்னை, நவ. 19- சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாநி லச் செயலாளர் எஸ்.பாலா வலி யுறுத்தினார். மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்களை கைது செய்  யாமல் மெத்தனமாக செயல்படு வதையும்  வழக்கு விசார ணையை முறையாக நடத்தாத  காவல்துறையை கண்டித்து வாலிபர் சங்கத்தின் சார்பில் திங்களன்று (நவ.18) சைதாப் பேட்டையில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய சங் கத்தின் மாநிலச் செயலாளர் எஸ். பாலா, “மாணவி பாத்திமா லத்தீப்  தற்கொலை செய்து கொண்டி ருந்தாலும், கொலை செய்யப்  பட்டிருந்தாலும் அதற்குகாரண மான குற்றவாளிகளை தண் டிக்க வேண்டும். கொலைக்கு காரணமான பேராசிரியர்களின் பெயரை மாணவி குறிப் பிட்டுள்ள நிலையில், அவர் களை காவல்துறை கைது செய்  யாமல் இருப்பதன் மர்மம் என்ன?  அவர்களை பாதுகாப்பது யார்? எனவே, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்” என கேள்வி எழுப்பினார்.

வழக்கறிஞர் அருள்மொழி

திராவிடர் கழக கொள்கை பரப்புச் செயலாளர் வழக்கறி ஞர் அருள்மொழி பேசுகையில்,  “இடஒதுக்கீடு அமல்படுத்தப் பட்ட பிறகுதான் உயர்கல்வி நிறு வனங்களில் இதுபோன்ற தற் (படு)கொலைகள் அதிக ரித்துள்ளது. இறப்பவர்கள் அனைவரும் இடஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இவ்வாறு இறந்தவர்களின் இடங்களில் யாரைக் கொண்டு மீண்டும் நிரப்புகிறார்கள் என் பதை ஆராய்ந்தாலே அந்த கொலைகளுக்கான காரணம் யார் என்பது தெரியும்” என்றார்.

“நமது சமூகத்தில் இருந்து  உருவாகும் அறிவாளிகளை  கொன்று கொண்டிருக்கிறார் கள். ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் மூலம்  ‘அவர்கள்’ அதிக அதிகாரம்  பெறுகின்றனர். நூற்றாண்டு களாக போராடி பெற்ற உரி மையால், அந்த கல்வி நிலை யங்களில் நுழையும் ஏழை எளிய  பிள்ளைகளை சாதி, மதத்தின் பெயரால் வெறுப்பை உமிழ்ந்து  கொல்கிறார்கள். இதற்கெதி ரான போராட்டம் தொடரும்” என்றும் அவர் கூறினார்.

வீ.மாரியப்பன்

இந்திய மாணவர் சங்கத்தின்  மாநிலச் செயலாளர் வீ.மாரியப்  பன் பேசுகையில், “ஒரே வாரத்  தில் திருச்சியில் 3 மாணவிகள்  இறந்துள்ளனர். இத்தகைய  கல்வி வளாக படுகொலை களை தடுக்க அரசு எந்த நட வடிக்கையும் எடுக்காமல் உள்ளது. பாலியல் சீண்டல் களை மூடிமறைக்க தமிழக அரசே குற்றவாளிகளை தப்ப வைக்கிறது. பாத்திமாவின் பெற்றோர் 10 கேள்விகளை முன்  வைத்துள்ளனர். அதன்மீது நியாயமான விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த தலைகுனிவு குறித்து முதலமைச்சர் பதி லளிக்க வேண்டும்” என்றார். இக்கூட்டத்திற்கு தென் சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் தலைமை தாங்கினார். வாலிபர் சங்க மாநி லப் பொருளாளர் தீபா, தென்  சென்னை மாவட்டச் செய லாளர்கள் ப. ஆறுமுகம், வட சென்னை மாவட்டச் செயலாளர் சரவணதமிழன், பொருளாளர் மஞ்சுளா, தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் மு.பா. மணிகண்டன், யுவராஜ் உள் ளிட்டோர் பேசினர்.