tamilnadu

img

டிசம்பர் 3 தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்?

புதுதில்லி, நவ. 3- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா வின் வருவாய் ஆறு ஆண்டுகளில் 150 மடங்கு அதிகரித்துள்ளது. ஜெய் ஷாவின் நிறுவனமான குசும் பின்செர்வ்-வின் நிர்வாகம் வர்த்தகத்துறை அமைச்சகத்துக்கு சமர்ப்பித்துள்ள ஆவணங்களின் அடிப்ப டையில் ‘தி காரவன்’ இதழ் செய்தி வெளி யிட்டுள்ளது. ஆவணங்களில் நிறு வனத்தின் வர்த்தகம் என்ன என்பது  தெரிவிக்கப்படவில்லை எனவும், வங்கிகள் உள்ளிட்ட ஏஜென்சிகளி லிருந்து நிறுவனத்துக்கு பெருமள விலான கடன் கிடைத்துள்ளது எனவும்  செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.      2013-14 நிதி ஆண்டில் வெறும் ரூ.79.6 லட்சமாக இருந்த வருவாய் 2018-19இல் ரூ.119.61 கோடியாக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் மொத்த மூலதனம் 2015இல் ரூ.1.21 கோடியாக இருந்தது. இது 2019இல் ரூ.25.83 கோடியானது. சொத்துகளிலிருந்து கடனை நீக்கினால் கிடைப்பது லாபம். 2015இல் ரூ.51.74 லட்சமாக இருந்த நிலையான சொத்து மதிப்பு 2019இல் ரூ.23.25 கோடி ஆனது. பணம், முதலீடு உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தும் சொத்து 2015இல் ரூ.37.80 லட்சமாக இருந்தது 2019இல் ரூ.33.43 கோடியானது.    

2013இல் குசும் பின்செர்வ் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. பின்னர் கூட்டு நிறுவனமாக (எல்எல்பி) மாறியது. இயக்குநரின் தவறான செயல்களுக்கு மற்றவர் பொறுப்பு ஏற்க வேண்டியதில்லை என்பதே இதன் ‘சிறப்பு’. 2017, 2018இல் நிறுவனத்தின் கணக்குகள் உரிய நேரத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. ஆனாலும் கணக்கை ஒப்படைக்காத நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை களிலிருந்து குசும் பின்செர்வுக்கு மத்திய அரசு விலக்கு அளித்தது. ஜெய்ஷாவின் மற்றொரு நிறுவனமான டெம்பிள் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிட்டெடின் வருவாய் 2016இல் 16,000 மடங்கு  அதிகரித்துள்ளது.    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30க்குள் கணக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு இந்த அசாதாரணமான வருவாய் உயர்வு விவாதத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே முந்தைய இரண்டு ஆண்டுகள் ஆவணங்கள் சமர்ப்பிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.