சென்னை,டிச.18- தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வியாழனன்று வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான மனுத்தாக்கல் நிறைவடைந்தது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, 2 லட்சத்து 6 ஆயிரத்து 657 மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 54 ஆயிரத்து 747 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 32 ஆயிரத்து 939 வேட்பு மனுக்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 ஆயிரத்து 992 வேட்பு மனுக்களும் தாக்கலாகி உள்ளன. இத்தேர்த லில் போட்டியிட மொத்தம் 2 லட்சத்து 98 ஆயிரத்து 335 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் செவ்வாயன்று நடைபெற்றது. வேட்புமனுக்களை திரும்ப பெற வியாழனன்று கடைசி நாள் என்பதால், இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்பாளர்களுக்கான சின்னங்களும் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்படும் என்று தகவல் வெளியாகி யுள்ளது.