tamilnadu

img

ஆசிரியர், அரசு ஊழியர் தேர்வில் அதிமுக அரசின் ஊழல் - முறைகேடுகள்

சென்னை, பிப். 4- தமிழகத்தில் ஆசிரியர், அரசு ஊழி யர் தேர்வில் அதிமுக அரசின் ஊழல் -  முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. கட்சியின் தமிழ்நாடு மாநில செயற் குழுக் கூட்டம் பிப்ரவரி 3, 4 தேதிகளில் சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராம கிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப் பினர்கள் கே. வரதராசன், பி.சம்பத், உ. வாசுகி,  மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட னர். இக்கூட்டத்தில் இது தொடர்பாக நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: தமிழக அரசின் உயர்கல்வித் துறையில் கலை, அறிவியல் கல்லூரி கள் மற்றும் கல்வியல் கல்லூரிகளுக் கான உதவிப்பேராசிரியர்கள் நிய மனத்தில் பெரும் ஊழல் நடைபெற்றுள் ளதாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி யளிக்கிறது.

2340 பணியிடங்களுக்கான இந்த நிய மனத்தில் ரூ.700 கோடிக்கும் மேல் லஞ்சம் புரள்வதாக பல்வேறு செய்தி கள் வெளிவந்துள்ளன. இதற்கு பல்வேறு அடுக்குகளில் இடைத் தரகர்களை நியமித்து, ஒரு நியமனத் திற்கு ரூ.30 லட்சம் என்ற வகையில் ரூ. 700 கோடிக்கு மேல் இந்த லஞ்சப் பணம் கை மாறியுள்ளது என தெரிகிறது. இது உதவிப் பேராசிரியர் பணிக்காக விண்ணப்பித்துள்ளவர்களிடையிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கவலையையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக கல்வித்துறையில் நடை பெறும் இந்த ஊழல் நடவடிக்கையை சிபிஐ(எம்) மாநில செயற்குழு வன்மை யாக கண்டிக்கிறது. லஞ்சம் கொடுத்து வரும் தகுதியற்ற பேராசிரியர்கள் எந்த அளவு தரமான கல்வியை வழங்கு வார்கள் என்பதும் கேள்விக்குறியே. இத னால் தமிழ்நாட்டின் கல்வித்தரத்தையும் - மாணவர்களின் உயர்கல்வி தரத்தை யும் பெருமளவில் பாதிக்கும். ஏற்கனவே அரசுப் பணியாளர் தேர்வு  வாரியமான டி.என்.பி.எஸ்.சி.யின் “குரூப் -4” தேர்வு முறைகேடுகள் குறித்த  விவரங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை  உதவியாளர் உள்ளிட்ட பணி இடங் களுக்கு நடத்தப்பட்ட “குரூப் - 4” தேர்வில் தேர்ச்சி பெற ஏராளமான தொகை லஞ்சப் பணமாக கைமாறிய விபரங்கள் வெளிவந்து கொண்டிருக் கின்றன. குரூப்-4 தேர்வு முறைகேடு களின் அதிர்வலைகள் அடங்கு வதற்குள் தற்போது குரூப்-2 தேர்விலும் கையூட்டுகள் பெறப்பட்ட விபரங்கள் சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் வெளி வந்து கொண்டுள்ளன. தேர்வாணைய ஊழியர்கள், காவல்துறையினர், தனியார் பயிற்சி மையங்கள் நடத்துபவர்கள் என பலரும் இணைந்து பெரும் கூட்டு சேர்ந்து, அரசின் ஆதரவோடு இந்த ஊழல் முறை கேடுகளில் பின்னணியாக இயங்கி வந்துள்ளது தெரிய வருகிறது.

அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் லஞ்ச - லாவண்யங்கள் தலைவிரித்தாடி வரு கின்றன. பல அமைச்சர்கள் மீது, உயர்மட்ட அதிகாரிகள் மீதும் பல்வேறு  ஊழல் குற்றச்சாட்டுக்களும், வழக்கு களும் உள்ளன.  இந்நிலையில் மேற்கண்ட முறைகேடுகள் தமிழக மக்களிடம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் ஊழல்சேற்றில் மூழ்கியுள்ளது என்பதற்கு இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளும், உதவிப்பேராசிரியர் நியமனத்தில் நடைபெறும் ஊழல்களும் கூடுதல் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. எனவே, உதவிப் பேராசிரியர் நிய மனத்திற்கான முறைகேடுகள் மற்றும்  டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை தாமத மின்றி விசாரிக்க வேண்டுமெனவும், ஊழல்-முறைகேட்டிற்கு காரணமான அனைவரையும் சட்ட ரீதியான நட வடிக்கைகளுக்கு உட்படுத்தி தண்டிக்க  வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.