அதிகாரிகளின் அவமரியாதை பேச்சால் தற்கொலை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
சென்னை, ஏப்.25- உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப் பட்ட திருப்பூர் மாவட்ட விவசாயி தற் கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், இராமபட்டணத்தில் ராமசாமி (வயது 75) என் கிற விவசாயி அவரது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரத்தில் ஏப்ரல் 25 அன்று காலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது நிலத்தில் தமிழக மின் தொடர மைப்புக் கழகம் 400 கே.வி. உயர்மின் அழுத்த மின்கோபுரத்தை அமைத்து வருகிறது. இதற்காக விவசாயி ராமசாமி உயர்ந்தபட்ச இழப்பீடு கோரி வந்தார். அவர் கேட்ட இழப் பீட்டை வழங்குவதாகக் கூறிய அதிகாரிகள் வழங்கவில்லை என்பது மட்டுமல்ல, வழங் குவதாகக் கூறி அவரை இழுத்தடித்து உள்ளனர். உரிய இழப்பீடு கிடைக்காததால் மனமுடைந்த ராமசாமி மிகவும் வருத்தத் தில் இருந்துள்ளார். இனிமேல் தமக்கு இழப் பீடு ஏதும் வராது என்று எண்ணிய அவர், தனது தோட்டத்தில் புதிதாக அமைக் கப்பட்ட உயர்மின் கோபுரத்திலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள் ளார்.
காவல்துறை துணைகொண்டு திட் டத்தை நிறைவேற்ற முயற்சிப்பதன் காரண மாகவே விவசாயிகளிடத்தில் பதற்றம் ஏற் பட்டு இப்படிப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்ப வங்கள் நிகழ்கின்றன. விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றுப்பாதையில் உயர்மின் கோபுரத்தை அமைக்க வேண்டும் அல் லது அவர்களது வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவர்களுக்கு உயர்ந்தபட்ச இழப் பீட்டை வழங்குவது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பல்வேறு போராட்டங் களை நடத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழக அரசை தொடர்ந்து வலி யுறுத்தி வந்தது. ஆனால் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அநியாயமாக ஒரு விவசாயி உயிரை இழக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
உயர்மின் அழுத்த கோபுரம் அமைத்த தில் பல விவசாயிகளுக்கு பாக்கி தொகை அளிக்க வேண்டியுள்ளது. இதனால் பல விவ சாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள னர். எனவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயி குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிவாரணத் தொகை வழங்குவதோடு, அவரது மர ணத்தை உரிய சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கு கார ணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
மேலும் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கப்பட்டதில் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை யை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். விவசாயி ராமசாமி அவர்களின் மறை வால் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் சங்கம்
திருப்பூர் விவசாயி ராமசாமி தற் கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்வதுடன், அவருடைய தற்கொலைக்கு தமிழக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ. சண்முகம் கூறியுள்ளார். உயரழுத்த மின்கோபுரம் அமைக்கும் பிரச்சனையில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேசி இறுதி யான முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு முயற்சி எடுக்க வேண் டும் என்றும், விவசாயி ராமசாமி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.