சென்னை, நவ. 19 - பதவி உயர்வு பெறும் பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான இடத்தில் இடைநிலை ஆசிரியர்களை கொண்டு நிரப்பாமல் பள்ளிக்கல்வித்துறை வஞ்சிப்பதாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இந்த ஆண்டு நடைபெற்ற பதவி உயர்வு கலந் தாய்வில் பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 2 ஆயிரத்து 600 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதனடிப் படையில் 2ஆயிரத்து 600 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உருவாகி உள்ளது.
இந்தப்பணியிடங்களை நிரப்பும்போது, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 4 ஆண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயர்வை கருத்தில் கொள்ள வேண்டும். அரசு கொள்கை முடிவுபடி பதவி உயர்வில் தமிழில் பயின்ற இடைநிலை ஆசிரி யர்களுக்கு 66.6 விழுக்காடு, மற்ற பாடங்களுக்கு 50 விழுக்காடு என்ற விகிதாச்சார அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். இதற்கு மாறாக 2 ஆயிரத்து 600 காலிப் பணியிடங்களையும் உபரியாக கருதுவதாக செய்தி வெளியாகிக் கொண்டிருப்பது வருத்தமளிக்கி றது. இதனால் 8 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் பட்ட தாரி ஆசிரியர்கள் உபரி எனக் கணக்கில் கொண்டு இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வு மறுக்கப் படுகிறது. எனவே அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு உடனே முன்னுரிமைப் பட்டியல் வழங்கி விகி தாச்சார அடிப்படையில் பதவி உயர்வு வழங்குமாறு தமிழக அரசையும், பள்ளிக் கல்வித்துறையும் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.