tamilnadu

img

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜூன் 23- பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மோட்டார் தொழிலை அழிக் கும் மத்திய -மாநில அரசுகளை கண் டித்து கும்பகோணத்தில் சாலை போக்குவரத்து மற்றும் ஆட்டோ தொழி லாளர்கள், ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், சாலை போக்குவரத்து சங்க மாநில துணை செயலாளர் பார்த்த சாரதி, மாவட்டத் தலைவர் எம்.கண் ணன் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதே போல் கும்பகோணம், சோழ புரம், திருக்கருக்காவூர் திருவிடைமரு தூர், பாபநாசம் திருபுவனம், எஸ். புதூர் திருமங்கலக்குடி, அவனியா புரம் திருநாகேஸ்வரம் ஆகிய பகுதி களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாபநாசத்தில் மாவட்டச் செயலா ளர் சங்கர் தலைமையிலும் திருவிடை மருதூரில் கலியபெருமாள், திருபுவ னம் -சரவணன், ஜோதி, திருநாகேஸ் வரம் -கலியமூர்த்தி எஸ்.புதூர்- செல்வம், தினேஷ், திருமங்கலக்குடி- முஹம்மது பாரி ஆகியோர் தலைமை யிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் சா.ஜீவ பாரதி என்.பி.நாகேந்திரன் ஜி.பக்கிரி சாமி, உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் பி.ஜேசுதாஸ் கோவிந்த ராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம், மயிலாடுதுறை யில் ஆட்டோ தொழிலாளர் சங்கம்- சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் அவுரித்திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஆட்டோ தொழிலாளர் சிஐடியு சங்க  மாவட்டச் செயலாளர் எம்.வி.மகேந்தி ரன் தலமை வகித்தார். நாகைத் தொழிற் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செய லாளர் சு.மணி, அரசு ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சொ.கிருஷ்ண மூர்த்தி, பி.எஸ்.என்.எல். முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.குருசாமி உள்ளிட்டோர் பேசினர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் ஆட்டோ தொழிலாளர் சிஐடியு சங்க மாவட் டத் தலைவர் ஆர்.ரவீந்திரன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.கணேசன், மயிலாடு துறை சிறு வியாபாரிகள் சங்கச் செயலா ளர் டி.துரைக்கண்ணு, தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் த.இராயர், எஸ்.என்.டி.ரமேஷ் உள் ளிட்டோர் பேசினர்.