சென்னை, மே 14- தமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கும் போது ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்காக உயரும் என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து சங்க தலைவர் அப்சல் தெரிவித்திருக்கிறார். நாடு முழுக்க மே 17 ஆம் தேதி ஊர டங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. ஆனால் இன்னொரு பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.
மே 18 -ல் இருந்து கூடுதல் தளர்வுகளு டன் கூடிய புதிய ஊரடங்கு அமலாக உள்ளது. தமிழகத்தில் கடந்த 40 நாட்க ளாக பேருந்துகள் எதுவும் இயங்க வில்லை. மிக விரைவில் குறைந்த எண் ணிக்கையில் அரசு பேருந்துகள் இயங்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. தனியார் பேருந்துகள் இப்போது இயங்க வாய்ப்பில்லை என்றும் தெரி விக்கப்படுகிறது. ஆனால் இன்னும் அரசு இது தொடர்பாக அறிவிப்புகள் எதையும் வெளியிட வில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கும் போது ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்காக உயரும் என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து சங்க தலைவர் அப்சல் தெரிவித்திருக்கிறார். தற்போது ஒரு கி.மீ-க்கு 1.60 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் 3.20 ரூபாயாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்து பேருந்து சேவை தொடங்கும்போது புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது என்று அவர் தெரி வித்துள்ளார். இதனால் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரு மடங்கு உயர்கிறது.