பொன்னமராவதி, ஜன.7- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் அரசமலை ஊராட்சி வையாபுரியில் புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா மற்றும் வையாபுரி பெஸ்ட் மகளிர் மன்றம் ஆகியவற்றின் சார்பில் வட்டார அளவிலான இளைஞர் மன்றங்கள் வளர்ச்சி மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசமலை ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா கணக்காளர் நமச்சிவாயம் விழா நோக்கவுரையாற்றினார். மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் பாரத் முன்னிலை வகித்தார். பெஸ்ட் தொண்டு நிறுவன நிறுவனர் தனலெட்சுமி வாழ்த்துரை வழங்கினார். இளைஞர்- மகளிர் மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் வரும் நாட்களில் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் தவறாது கலந்து கொள்ள வலியுறுத்தப்பட்டது. மேலும் தூய்மை பாரதம் பங்கேற்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. தேசிய இளையோர் நிர்வாகி சிவராமகிருஷ்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பெஸ்ட் மகளிர் மன்றத்தினர் மற்றும் ரம்யா செய்திருந்தனர்.